குங்குமம், துப்பட்டாவுடன் பெண் வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்: வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தலையில் துப்பட்டா, நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படம் டெல்லியில் நடந்த ஹிஜ்ரா விழாவில் எடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் விழுப்புரத்தில் ஆண்டுதோறும் திருநங்கைகள் கலந்து கொள்ளும் கூவாகம் திருவிழா நடக்கும்.

அதே போல விழா தான் டெல்லியில் ஹிஜ்ரா என்ற பெயரில் நடந்துள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் கம்பீருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அதை பெருந்தன்மையுடன் ஏற்று அவர் அங்கு சென்றுள்ளார்.

கம்பீரின் இச்செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers