இதிலும் உசைன் போல்ட் தான் டாப்: அசத்தல் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

மின்னல் மனிதன் உசைன் போல்ட் பூஜ்யம் புவி ஈர்ப்பு விசை சூழலில் நடத்தப்பட்ட ஓட்டப்பந்தய போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

ஒலிம்பிக்கில் 8 முறை தங்கப்பதக்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட் தான், பூமியிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய மனிதர் என அறியப்பட்டவர்.

இவரை ரசிகர்கள் அனைவருமே செல்லமாக மின்னல் மனிதன் என அழைப்பார்கள்.

இவர் தற்போது ஒட்டப்பந்தயத்திலிருந்து ஓய்வு பெற்று கால்பந்து போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனியார் அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி ஒன்றில் உசைன் போல்ட்டும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிரான்ஸ் நாட்டில் பூஜ்யம் புவி ஈர்ப்பு விசை சூழலில் இருக்கும் ஒரு விமானத்தில் அந்த ஓட்டப் பந்தய போட்டி நடைபெற்றது. இதில் உசைன் போல்ட் உடன் வேறு இரண்டு நபர்களும் கலந்து கொண்டனர்.

யாருமே எதிரிபார்த்திராத நேரத்தில், வானிலும் கூட என்னால் வெற்றி பெற முடியும் என்பதை உசைன் போல்ட் நிரூபித்துகாட்டி போட்டியில் வெற்றி பெற்றார்.

இந்த வீடியோவானது உசைன் போல்ட்டால் இணையத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்