பாலிவுட் நடிகர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விருந்தளித்த டோனி! ஏன் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி பாலிவுட் நடிகர்களான ஆயுஷ் ஷர்மா மற்றும் வார்னா ஹுசைன் ஆகியோரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விருந்தளித்துள்ளார்.

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

டோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதால், அவர் தற்போது தனக்கான நேரத்தை மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார்.

இந்நிலையில் டோனி பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானின் மச்சானான ஆயுஷ் மற்றும் நடிகை வார்னா ஆகியோரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார்.

வரும் அக்டோபர் 5-ஆம் திகதி இவர்கள் இருவரும் நடித்துள்ள லவேரத்ரி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இருவருமே இந்த துறையில் புதியவர்கள் என்பதால், படத்தின் விளம்பர பணிக்காக இவர்கள் கொல்கத்தா சென்றிருந்தனர். சமீபத்தில் ராஞ்சி சென்றுள்ளனர்.

ராஞ்சி வந்திருந்த இவர்கள் இருவரையும் டோனி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார்.

Girl Power !! Felt so proud seeing these female auto drivers #ranchi

A post shared by WARINA HUSSAIN (@warinahussain) on

இது குறித்து ஆயுஷ், டோனி தங்களுடைய படக் குழுவை விசேஷமாக வீட்டிற்கு அழைத்திருந்தார். டோனி மிகவும் அன்பாக பழகக்கூடியவர்

ஒரு பெரிய கிரிக்கெட் நட்சத்திரமாக இருந்தபோதிலும், அவர் தாழ்வாகவும், பணிவாகவும் உள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்