தங்க மங்கைக்கு விமான நிலையத்தில் வைத்து நடந்த நிச்சயதார்த்தம்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை விக்னேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை விக்னேஷ் போகத் ஜகர்தாவில் இப்போது நடந்து வரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட் டியில் கலந்துகொண்டார்.

இதில், பெண்கள் மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில், ஜப்பானின் யூகி இரியை இறுதிப் போட் டியில் எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியின், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் இறுதியில், யூகியை தோற் கடித்து தங்கம் வென்றார்.

தங்க மங்கையாக இந்தியா திரும்பிய இவருக்கு டெல்லி விமான நிலையத்தில் வைத்து இவரது நீண்ட நாள் நண்பரான சோம்வீர் ரதியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்