கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார்: பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி பரபரப்பு புகார்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

வங்கதேச கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மொசாடெக் ஹுசைன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளார்.

வங்கதேச அணிக்காக இரண்டு டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் மொசாடெக் ஹுசைன் (22).

மொசாடெக் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்தார். தற்போது 1 மில்லியன் டாகா (12,003 அமெரிக்க டொலர்) கேட்டு மொசாடெக் தன்னை சித்ரவதை செய்வதாகவும், உட்சக்கட்டமாக கடந்த 15-ம் திகதி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் அவர் மனைவி வழக்கறிஞர் மூலம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மொசாடெக் ஹுசைன் கருத்து கூற மறுத்துவிட்ட நிலையில், அவரது சகோதரர் மொசாபெர் ஹுசைன் மூன் கூறுகையில், அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்தே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

எனது சகோதரர் ஆகஸ்ட் 15-ம் திகதியே விவாகரத்து கடிதம் அனுப்பிவிட்டார்.

ஆனால் அவரது மனைவி அதிக பணம் கேட்டு கிடைக்காததால் பொய் வழக்கு தொடர்ந்துள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்