இங்கிலாந்தில் நடந்த நீர்மூழ்கி செஸ் சாம்பியன்ஷிப் போட்டி! மூச்சைப் பிடித்துக் கொண்டு விளையாடிய வீரர்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்த நீர்மூழ்கி செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், Rajko Vujatovic என்ற வீரர் வெற்றி பெற்றார்.

லண்டன் நகரில் நீர்மூழ்கி செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதற்காக நீச்சல் குளம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த போட்டியின் விதிமுறைகள் என்னவென்றால், வீரர்கள் காந்த பலகை மற்றும் காந்த செஸ் காய்களைப் பயன்படுத்தி, நீருக்குள் மூழ்கி விளையாட வேண்டும்.

ஒவ்வொரு முறை காயை நகர்த்துவதற்கும் நீரில் மூழ்கும் வீரர் ஒருவர், காயை நகர்த்தாமல் வெளியே வந்து மூச்சு வாங்கக்கூடாது. அத்துடன் வீரர்கள் எந்தவித சுவாசக் கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது.

இந்த ஆட்டம் ஒரு மணிநேரம் மட்டுமே நடைபெறும். மிகவும் வித்தியாசமானதாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இந்த போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் விளையாடினர்.

போட்டியின் முடிவில் Rajko Vujatovic என்ற இங்கிலாந்து வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டி குறித்து அவர் கூறுகையில், ‘எதிலும் உலக சாம்பியனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

நீர்மூழ்கி செஸ் சாம்பியனாக இருப்பது எவ்வளவு பெரிய விடயம். இது முற்றிலும் பதற்றமாக இருந்தது. எனினும், முதல் மற்றும் முன்னணியில் இருப்பது வேடிக்கையாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்