யாழில் விறுவிறுப்பாக ஆரம்பமான தமிழர் பிறீமியர் லீக் இறுதிப் போட்டி! உலகம் முழுவதும் நேரலை

Report Print Nivetha in ஏனைய விளையாட்டுக்கள்

IBC தமிழ் பெருமையுடன் நடத்தும் வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி தற்போது யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

தெற்காசியாவில் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட NEPL தொடரின் இறுதிப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணியும், யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய 4 அணிகளில் ஒன்றான ரில்கோ கொங்கிரஸ் அணியும் மோதுகின்றன.

கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த NEPL தொடரில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகள் பங்குபற்றியிருந்தன.

இந்நிலையில், தற்போது இறுதி போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் யாழ்.மாவட்டத்தில் இருந்து நொதேர்ன் எலைட் அணியும், வல்வை FC அணியும், தமிழ் யுனைடட் அணியும், ரில்கோ கொங்கிரஸ் அணியும் பங்குபற்றியிருந்தன.

முதலாவது அரையிறுதி போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட ரில்கோ கொங்கிரஸ் அணி 00 : 05 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிக்குள் முன்னேறியது.

அடுத்து 21/08/2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எலிமினேற்றர் போட்டியில் வல்வை FC அணியும் மன்னார் FC அணியும் மோதியிருந்தன.

இந்த போட்டியில் மன்னார் அணியை வீழ்த்தி வல்வை FC அணி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து வல்வை FC அணி மோதியிருந்தது.

இதேவேளை, 23/08/2018 வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் கிளியூர் கிங்ஸ் 02 :00 என்ற கோல் கணக்கில் வல்வை FC அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுளைந்தது.

இந்நிலையில் இன்று இறுதிப்போட்டியில் ரில்கோ கொங்கிரஸ் அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதுகின்றது.

இந்த போட்டியில் வானவேடிக்கைகள், மேள கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறுகின்றன.

இந்த இறுதிப்போட்டியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் உதைப்பந்தாட்ட ரசிகர்கள் ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சி நேரலையில் கண்டு மகிழலாம்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்