ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ஏமாற்றம்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஆடவர் 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் லஷ்மணனுக்கு வெண்கல பதக்கம் வென்றது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

இதில் ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியில் தமிழக வீரர் லக்ஷ்மணன் வெண்கல பதக்கம் வென்றார். ஆனால் லட்சுமணன் ஓட்டப்பந்தய தடத்திற்கு வெளியே கால் வைத்ததால் தகுதியிழப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த போட்டிகளில் இது வரை இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 20 வெண்கலம் உள்ளிட்ட 36 பதக்கங்களை பெற்றுள்ளது.

முன்னதாக 20 ஆண்டுகளுக்கு பின்னர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியா வெண்கலம் வென்றதும், அது தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்