இங்கிலாந்து மண்ணில் மானத்தை காப்பாற்றிய தமிழர் அஸ்வின்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்குள் சுருண்டது. இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் டுகளை சாய்த்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பேர்ஸ்டோவ் (93), வோக்ஸ் (137) ஆகியோர் சிறப்பாக ஆடினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 130 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர்களில் அஸ்வின் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக் கெட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்.

லார்ட்ஸ் போட்டியிலும் அவர்தான், இந்திய அணியின் மானத்தை ஓரளவு காத்தார். இரண்டு இன்னிங்சிலும் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தவர் அவர்தான்.

முதல் இன்னிங்சில் 29 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 33 ரன்கள். 8-வது மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி இரு இன்னிங்சிலும் டாப் ஸ்கோரை பெற்ற முதல் இந்தியர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...