ஆண்டர்சனின் இந்த பந்தை எப்படி எதிர்கொள்வீர்கள்? ஹர்பஜனின் கேள்விக்கு அசத்தல் பதிலளித்த சச்சின்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனின் பந்துவீச்சில் முரளி விஜய் ஆட்டமிழந்தது குறித்து, ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்ட கேள்விக்கு, சச்சின் டெண்டுல்கர் அசத்தலாக பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்து- இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் முரளி விஜய் கிளீன் போல்டு ஆனார்.

இந்த வீடியோவை, இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்த பந்தை எப்படி விளையாட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர், இது ஜிம்மியின் அருமையான பந்துவீச்சு. ஆனால் உங்களுடைய தூஸ்ரா பந்தில் அவுட் ஆனவர்களும் இதே கேள்வியை என்னிடம் கேட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers