கோஹ்லியின் மனைவி அனுஷ்காவை கிண்டலடித்த ரசிகர்கள்: பிசிசி எப்படி அனுமதித்தது என ஆத்திரம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணி வீரர்களின் புகைப்படத்தில் கோஹ்லியின் மனைவியான அனுஷ்கா இடம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும், டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மழையால தடைபட்டது.

இந்நிலையில் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் இந்திய கிரிக்கெட் அணி அங்கு சென்ற போது, ஒட்டுமொத்த அணியும், தூதரக கட்டிடத்திற்கு முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டது.

இந்த புகைப்படத்தில் கோஹ்லியின் மனைவியான அனுஷ்கா சர்மாவும் இருந்தார்.

இதைக் கண்ட இணையவாசிகள் அனுஷ்கா சர்மா என்ன இந்திய அணியில் ஒருவரா? அவர் ஏன் இந்திய அணியுடன் புகைப்படத்திற்கு போஸ் தருகிறார்.

பிசிசிஐ இதனை எப்படி அனுமதித்தது? மற்ற வீரர்களின் மனைவிகள் எங்கே? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers