இந்திய வீரர்களுக்கு பந்து வீசிய சச்சின் டெண்டுல்கர் மகன்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய வீரர்களுக்கு, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசியுள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய முன்னாள் வீரர் சச்சினுடன் இங்கிலாந்துக்கு அவரது மகன் அர்ஜூன் சென்றுள்ளார்.

இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பயிற்சியின்போது, அணித்தலைவர் விராட் கோஹ்லி உள்ளிட்டோருக்கு அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசினார்.

இவர் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போதும், மகளிர் உலகக் கிண்ண போட்டிக்கு முன்பாக இந்திய மகளிர் அணிக்கு பந்து வீசியுள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers