இந்திய அணியுடன் அனுஷ்கா ஷர்மா: Like செய்து சர்ச்சைக்கு உள்ளான ரோஹித் ஷர்மா

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியுடன், விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மா இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்ட நிலையில், அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட டுவிட்களுக்கு, இந்திய வீரர் ரோஹித் ஷர்மா Like செய்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, இன்று 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது.

முன்னதாக, லண்டனில் உள்ள இந்திய தூதரகமானது இந்திய கிரிக்கெட் அணிக்கு விருந்து கொடுத்தது. அந்த விருந்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படத்தை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் இடம்பெற்றிருந்தார்.

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை, இந்திய வீரர்கள் தங்களுடைய மனைவி மற்றும் காதலியிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று பிசிசிஐ ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், கோஹ்லி மட்டும் தனது மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

கோஹ்லிக்கு மட்டும் அனுமதி அளித்தது ஏன் என்ற கேள்வி இந்த புகைப்படத்தால் எழுந்துள்ளது. மேலும் ட்விட்டரில் பலர் இதுகுறித்தும், 58.19 சராசரியை வைத்து ரோஹித் ஷர்மாவை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்று பி.சி.சி.ஐ-யை கேள்வி எழுப்பி ட்விட்களை பதிவிட்டனர்.

அந்த ட்விட்களுக்கு ரோஹித் ஷர்மா Like கொடுத்துள்ளார். இந்நிலையில், பிசிசிஐ-க்கு எதிரான ட்விட்களுக்கு ரோஹித் ஷர்மா Like கொடுத்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Stu Forster/Getty Images

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers