கருணாநிதி கிரேட்.. செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உருக்கம்

Report Print Kavitha in ஏனைய விளையாட்டுக்கள்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவையொட்டி பலர் அவரது மறைவிற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்

அந்தவகையில் செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்,“மரியாதைக்குரிய கருணாநிதி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். தமிழக அரசியலில் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர்.

என்னுடைய வாழ்நாளில் அவரை சந்திக்கும் வாய்ப்பு பலமுறை கிடைத்தது. நான் முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றபோது, எனக்கு பாராட்டு விழா நடத்தி, ஒரு செஸ் செட் பரிசாக அளித்தார். அதை எப்போதும் மறக்க முடியாது.

விளையாட்டு போட்டிகள் மற்றும் அதன் சாதனைகளை ஊக்குவிப்பவர். அவருடைய பேச்சுகள் மற்றும் பேச்சுத் திறனைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல்” என்றும் ஆனந்த் கூறியுள்ளார்.

2001ல் ஈரானின் தெஹ்ரானில் நடந்த போட்டியில்தான் விஸ்வநாதன் ஆனந்த் முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற போது முதல்வராக இருந்த கருணாநிதி அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறி சென்னையில் பாராட்டு விழா நடத்தியதுடன், அரசு சார்பில் ஒரு பிளாட்டையும் ஆனந்துக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...