கொஞ்சம் பொறுமையா இருங்க: ரசிகர்களிடம் கெஞ்சிய விராட் கோஹ்லி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியைப் பற்றி விரைவாக முடிவுக்கு வர வேண்டாம், கொஞ்சம் பொறுமை காக்கும் படி ரசிகர்களிடம் கோஹ்லி வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று துவங்குகிறது

இந்நிலையில் இந்திய அணித் தலைவர் கோஹ்லி ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்திய அணியைப்பற்றி ரசிகர்கள் விரைவாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம், கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். இந்திய வீரர்களின் செயல்பாட்டில் எவ்வித சிக்கலும் இல்லை.

எல்லாம் மனதளவில் உள்ள சிக்கல் தான். இதை இந்திய வீரர்கள் விரைவில் சரி செய்து விடுவோம். அதற்கு ரசிகர்களின் ஆதரவும் தேவை என கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers