தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் கலக்கும் முத்துசாமி! தமிழர்கள் பெருமிதம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

தென் ஆப்பிரிக்க ஏ அணியில் தமிழக வீரர் முத்துசாமி இடம்பிடித்திருப்பதை தமிழர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பலரும், பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகளில் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர். அதிலும், தமிழர்கள் சிலரும் அடிக்கடி இடம்பிடித்து விளையாடி பெருமை சேர்த்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட தமிழர் சீனுரான் முத்துசாமி (24) என்ற இளைஞர் தென் ஆப்பிரிக்க அணியின் ஏ அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரவுண்டராக கலக்கும் முத்துசாமி 58 போட்டிகளில் விளையாடி 2990 ரன்கள் குவித்துள்ளதோடு, 104 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிறப்பானதொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் அதிகபட்சமாக 188 ரன்கள் குவித்துள்ளார். டர்பன் அணிக்காக ஆடும் முத்துசாமி கடந்த வருடத்திற்கான சிறந்த வீரர் என்ற விருதினையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவில் ஏ அணிக்கெதிராக தென் ஆப்பிரிக்க ஏ அணி மோதவுள்ள 3 போட்டிகள் கொண்ட தொடரில் முத்துசாமியும் இடம்பிடித்துள்ளார்.

முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியின் தமிழகத்தின் ஜீவேசன் பிள்ளை என்ற இளைஞர் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்