கல்யாண வீட்டில் ஆட்டம் போட்ட டோனியின் மனைவி-மகள்: சிரித்த்துக் கொண்டே ரசித்த வீடியோ

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியின் மனைவி மற்றும் அவரது மகள் ஜீவா கல்யாண வீட்டில் போட்ட ஆட்டம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் பிரபல் பட்டேலின் மகள் பூர்ணா பட்டேல் – நமித் சோனி திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த திருமண விழாவில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதில் முதல் நாள் நடைப்பெற்ற மெஹந்தி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான டோனி, தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டார்.

அப்போது டோனியின் செல்ல மகள் ஜிவாவும், அவரது மனைவி ஷாக்சியும் ஒன்றாக சேர்ந்து இந்தி பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். இதனை ஓரத்தில் நின்றுக் கொண்டு டோனி பார்த்து கைத்தட்டி ரசிக்கிறார்.

இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, தற்போது இதை டோனி ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers