இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஒரு ஆண்டு விளையாட தடை: கிரிக்கெட் வாரியம் அதிரடி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஜெர்பி வான்டர்சே அணியில் ஒழுங்குக் குறைவாக நடந்து கொண்டதையடுத்து ஒரு ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணி கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் சென்றிருந்தது.

அப்போது போட்டி முடிந்த பின்னர் அணி வீரர்கள் அனைவரும் ஹொட்டலில் இருந்து வெளியே சுற்றிப் பார்க்கச் சென்றனர்.

ஆனால், அவர்கள் அனைவரும் இரவு ஹொட்டலுக்கு திரும்பிவிட்ட நிலையில் இலங்கை வீரர் வான்டர்சே மறுநாள் காலையில் தான் ஹொட்டலுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து இலங்கை அணியின் ஒழுக்கநெறிமுறைகளுக்கு எதிராக வான்டர்சே நடந்து கொண்டார் என புகார் கூறப்பட்ட நிலையில் அவர் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் இதை ஏற்காத நிர்வாகம் வான்டர்சே அணியில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இதோடு அவர் ஒரு ஆண்டுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படுகிறது.

மேலும் ஆண்டு ஒப்பந்த ஊதியத்தில் இருந்து 20 சதவீதத்தை அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers