டோனி தான் இந்திய அணியின் கேப்டன்: பிசிசிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் போர்டு கவுன்சில் தன்னுடைய, அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் டோனி பெயருக்கு அருகில் கேப்டன் என குறிப்பிட்டிருந்தால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வித போட்டிகளிலுமே சிறந்த ஒரு கேப்டனாக விளங்கிய டோனி, அவுஸ்திரேலிய சுற்று பயணத்தின் போது, அதாவது கடந்த 2014 டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டின் துவக்கத்தில், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகி, விக்கெட் கீப்பராக மட்டும் நீடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் போர்டு (BCCI) தன்னுடைய அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் டோனியின் பெயருக்கு பக்கத்தில், இந்திய அணி கேப்டன் என குறிப்பிட்டிருந்தது. இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட பிசிசிஐ உடனடியாக அதனை நீக்கியது. ஆனால் ரசிகர்கள் அதனை புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ரசிகர் ஒருவர், டோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் பிசிசிஐ இன்னும் தோனி தான் கேப்டன் என நினைத்துக் கொண்டிருக்கிறது.எல்லோரும் தற்காலிக கேப்டன் தான். ஆனால் கூல் தோனி தான் எப்போதும் அணியின் கேப்டன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்