ஹொட்டலில் ரூ.16 லட்சத்தை டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ: மிரண்ட ஊழியர்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

ஹொட்டல் விருந்தோம்பலில் திருப்தியடைந்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ 16 லட்ச ரூபாயை டிப்ஸாக கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக விளையாடிய நிலையில் சமீபத்தில் அதிலிருந்து விலகி இத்தாலியின் ஜூவாண்டஸ் கிளப்பில் விளையாட ஒப்பந்தம் ஆனார்.

இதற்காக நான்கு ஆண்டுகளுக்கு அவருக்கு 800 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தனது காதலி மற்றும் குடும்பத்துடன் கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில் கோஸ்டா நவரினோ என்ற ஆடம்பர ஹொட்டலில் ரொனால்டோ தங்கினார்.

செக் அவுட் செய்யும் போது ரொனால்டோ டிப்ஸாக மட்டும் 16 லட்சம் ரூபாயை ஹொட்டல் ஊழியர்களுக்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து மிரண்டு போய் வாயடைந்த ஹொட்டல் நிர்வாகம் இதை தெரிந்து தான் தருகிறீர்களா என கேட்ட நிலையில். ஆம் தெரிந்தே கொடுத்திருக்கிறேன் என புன்னகையுடன் ரொனால்டோ விடை பெற்றுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்