ஒருவேளை மதிய உணவுக்கு ரூ. 7 லட்சம் பில்: சாப்பிட்டு முடித்ததும் அதிர்ச்சியில் உறைந்த வீரர்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் சமீபத்தில் சென்றுள்ளார்.

அங்குள்ள குட்டா பகுதியில் இந்திய உணவுகள் தயாரிக்கும் ஹொட்டல் ஒன்றில் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அதில் மதிய உணவாக பனீர் டீக்கா, பனீர் மசாலா, சாதம், சப்பாத்தி, வெஜிடபிள் கபாப் உள்ளிட்ட உணவுகளை ஆகாஷ் சோப்ரா சாப்பிட்டுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா சாப்பிட்டு முடித்ததும் பில் தொகையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். வாழ்நாளில் மறமுடியாத பில் தொகையாக அது அமைந்தது.

ஆகாஷ் சோப்ரா சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும், வரி உள்ளிட்டவை சேர்த்து மொத்தம் 6 லட்சத்து 99 ஆயிரத்து 930 பில் கொடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த ஆகாஷ் சோப்ரா அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இவர் 10 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 450 ரன்கள் வரை சேர்த்துள்ளார். டி20 போட்டிகளிலும், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் இடம் பெற்றிருந்தார். 150-க்கும் மேற்பட்ட முதல்தரப்போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்