கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா டோனி? வெளியான உண்மை தகவல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி ஓய்வு பெற போகிறார் என வேலையில்லாதவர்கள் கிளப்பிவிட்டுள்ளார்கள் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கு பின் அம்பயரிடம் இருந்து பந்தை டோனி வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது தான் டோனியின் கடைசி போட்டி என்பதால் பந்தை அவர் நினைவாக வாங்கி கொண்டார் எனவும் செய்திகள் பரவியது.

இந்நிலையில் இது குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், தோனி பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணிடம் பந்தை காண்பிக்க தான் அம்பயரிடம் இருந்து வாங்கினார். பந்து எப்படி உள்ளது என்பதை வைத்து ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொள்வது தான் அவரின் ஐடியா.

இதைப்போய் ஓய்வு என வேலையில்லாதவர்கள் கிளப்பிவிட்டுவிட்டார்கள். டோனி எங்கும் போகப்போவது இல்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்