இறுதிப்போட்டியில் இப்படி யாரும் செய்யமாட்டார்கள்: குரேஷியா அணி பயிற்சியாளர் காட்டம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கிண்ண இறுதி போட்டியில் இப்படியொரு பெனால்டியை யாரும் தரமாட்டார்கள் என குரேஷியா அணி பயிற்சியாளர் விமர்சித்துள்ளார்.

நேற்று நடந்து முடிந்த உலகக்கிண்ண கால்பந்து இறுதி போட்டியில் குரேஷியா அணியை 4-2 என்ற கணக்கில் பிரான்ஸ் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

இந்த போட்டியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்த போது பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிடைத்தது.

குரேஷியா வீரரின் கையில் பந்து பட்டதால் பெனால்டி தரப்பட்டது.

இது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டலிக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில், இரண்டாவது கோலை பெனால்டி மூலமாக அடித்தது பிரான்ஸ் அணி. அதை ஒரு வாக்கியத்தில் கூறுகிறேன்.

உலக கிண்ண இறுதி போட்டியில் இப்படியொரு பெனால்டியை தரமாட்டார்கள்.

இப்படியோரு போட்டியில் இப்படிப்பட்ட பெனால்டிக்கு வேலையில்லை.

நாங்கள் நன்றாக விளையாடினாலும், பெனால்டி எங்களை கீழே தள்ளிவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers