உலகக்கிண்ண கால்பந்து இறுதிபோட்டியில் பதக்கத்தை திருடிய பெண்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கிண்ண கால்பந்து போட்டி முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவில் பெண்ணொருவர் வீரர்களுக்கு தரும் பதக்கத்தை தனது பாக்கெட்டில் போட்டு கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

போட்டி முடிந்த பின்னர் வீரர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதக்கங்களை வழங்கினார்.

புடின் அருகில் பிபா தலைவர் ஜியானி இன்பாண்டினோ மற்றும் சிலர் நின்றிருந்தனர்.

அங்கு பெண் அதிகாரி ஒருவரும் நின்று கொண்டிருந்தார்.

அப்போது வீரர்களுக்கு தரும் பதக்கத்தை அப்பெண் தனது கோர்ட் பாக்கெட் உள்ளே போட்டு கொண்டார்.

அவர் ஏன் அப்படி பதக்கத்தை தானே எடுத்துகொண்டார் என சரியாக தெரியவில்லை.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் பலரும் பல காரணங்களை கூறி வருகிறார்கள்.

கிரேஹெம் முர்பி கூறுகையில், பதக்கம் வாங்கவேண்டிய யாராவது அங்கு இல்லாமல் இருந்திருக்கலாம், அவர் பதக்கத்தை அப்பெண் எடுத்து வைத்திருக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers