குரேஷியா உலகக்கோப்பை ஆடுகிறது! கோடி மக்கள் கொண்ட நாம் இந்து - முஸ்லிம் ஆட்டம் ஆடுகிறோம்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

24 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி பெறும் இரண்டாவது சாம்பியன் பட்டம் இது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர், ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான குரேஷியா உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது.

135 கோடி மக்களை கொண்ட நாம் இந்து - முஸ்லிம் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers