மனதால் இறந்துவிட்டேன்: குரேஷியா தோல்விக்கு பின்னர் கண்கலங்கிய பிரபல வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

குரேஷியா அணி உலகக்கிண்ண கால்பந்து இறுதி ஆட்டத்தில் தோற்றதையடுத்து கடலில் குதித்து விட வேண்டும் என தோன்றுவதாக குரேஷியா முன்னாள் வீரரும், கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான சுகேர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில் குரேஷியாவின் தோல்வி குரோஷிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் டவோர் சுகீர் பெரிதும் பாதித்துள்ளது.

அவர் கூறுகையில், நான் வெளியில் சிரித்தாலும், மனதில் இறந்துவிட்டதை போல உணர்கிறேன்.

இறுதிபோட்டி வரை சென்றுவிட்டு, பட்டத்தை வெல்லாமல் வருவதை ஜீரணைக்க கடினமாக உள்ளது.

குரேஷியா இரண்டாமிடம் பிடித்துள்ளது பெரிய சாதனை தான், ஆனாலும் நான் மனம் நொறுங்கிவிட்டேன்.

Adriatic கடலில் சென்று குதித்து விட வேண்டும் என தோன்றுகிறது என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...