குரேஷியா தோற்றவுடன் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கிண்ண கால்பந்து இறுதி ஆட்டத்தில் குரேஷியா அணி தோற்ற சோகத்திலும் அந்நாட்டு ரசிகர்கள் தங்கள் அணி வீரர்களின் திறமையை மனதார பாராட்டியுள்ளார்கள்.

ரஷ்யாவில் நடந்த கால்பந்து உலகக்கிண்ண திருவிழாவின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரேஷியா அணிகள் மோதிய நிலையில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

பிரான்ஸுடன் குரேஷியா அடைந்த தோல்வி அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.

இருந்தபோதிலும் நாட்டின் தலைநகர் Zagreb-ல் ஒன்று கூடிய மக்கள் தங்கள் அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசினார்கள்.

கிரிஸ்டிஜான் (22) என்ற ரசிகர் கூறுகையில், இறுதி நொடி வரை எங்கள் அணி வீரர்கள் களத்தில் உச்சமாக போராடியது பெருமையாக உள்ளது.

எங்கள் அணியினரை நினைத்தால் கர்வமாக உள்ளது, சிங்கம் போல எதிரணியை அவர்கள் எதிர்த்தார்கள் என கூறியுள்ளார்.

இது போல பல ரசிகர்கள் குரேஷியா வீரர்களின் திறமையை மனதார பாராட்டியுள்ளார்கள்.

இதனிடையில் இது குறித்து பேசிய குரேஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் ப்ளங்கோவிக், எங்கள் வீரர்கள் எங்களுக்கு உலக சாம்பியன்கள் தான்.

ஒற்றுமையாக எப்படி செயல்படுவது என்பதை அவர்கள் கற்றுகொடுத்துள்ளார்கள் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...