இங்கிலாந்து வீட்டுக்கு போய்விட்டார்கள்! ஆனால் நாங்கள்.... வெற்றிக்கு பின்னர் குதூகலித்த குரேஷியா ரசிகர்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் குரேஷியா அணி வெற்றி பெற்ற நிலையில் அந்நாட்டு ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோசியா அணிகள் மோதிய நிலையில் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

அணியின் வெற்றிக்கு பின்னர் அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்று வானவேடிக்கைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

குரேஷியா ரசிகர் ஒருவர் எங்கள் அணி ஜெயித்தால் சட்டையை அவிழ்த்துவிட்டு நீருற்றில் குதிப்பேன் என கூறிய நிலையில் அதை செய்தும் காட்டினார்.

அதே போல பலரும் நீருற்றில் குதித்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பெண் ரசிகை ஒருவர் கூறுகையில், இங்கிலாந்து வீட்டுக்கு போகிறது, நாங்கள் இறுதி போட்டிக்கு செல்கிறோம். எங்களின் குரேஷியா சிறிய நாடு தான்.

ஆனால் நாங்கள் நன்றாக கால்பந்து விளையாடுவோம் என கூறினார்.

இன்னொரு ரசிகர் கூறுகையில், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பண பிரச்சனை என பல பிரச்சனைகள் உள்ளது. ஆனாலும் இந்த வெற்றி எல்லாவற்றையும் மறக்க செய்துவிட்டது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம் என கூறியுள்ளார்.

இப்படி குரேஷியா மக்கள் பலரும் தங்கள் அணி வெற்றி பெற்ற கொண்டாட்ட அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...