சனத் ஜெயசூரியா முதல் தினேஷ் கார்த்திக் வரை: 2 பெண்களை திருமணம் செய்துகொண்ட கிரிக்கெட் வீரர்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
709Shares
709Shares
lankasrimarket.com

இரண்டு அல்லது மூன்று முறை திருமணம் செய்துகொண்ட பிரபல 3 கிரிக்கெட் வீரர்கள் இதோ

இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் 3 முறை திருமணம் செய்துகொண்டார். இவர் 1995-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த தன் காதலியான ஜெமிலா கோல்ட்ஸ்மித்தை மணந்தார்.

9 ஆண்டுகளுக்குப் பின் ஜெமிலாவை விவாகரத்து செய்தார். பின்னர் 2015-ம் ஆண்டில் தொலைக்காட்சி தொகுப்பாளரான ரேஹாம் கானை மணந்தார். 10 மாதங்களிலேயே இந்தத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

பின்னர், புஷ்ரா மனேகா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். அதன் பின் கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

தினேஷ் கார்த்திக்

கடந்த 2007ம் ஆண்டு தினேஷ் கார்த்திக், நிகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2012ம் ஆண்டு ஐபிஎல்-5வது சீசனின் போது நிகிதா முரளிவிஜயை சந்தித்திருக்கிறார்.

இவர்களது சந்திப்பு காதலில் முடிய, அதன் மூலம் அவர் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த தினேஷ் கார்த்திக் நிகிதாவை விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை காதலித்து மணந்து கொண்டார்.

சோயிப் மாலிக்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஆயிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை காதலித்து வந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தின் போது ஆண்டு நடைபெற்றது.

சனத் ஜெயசூரியா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜெயசூரியா 1998 ஆம் ஆண்டு Sumudhu Karunanayake என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், ஒரு வருடத்திற்குள் இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின்னர், 2000 ஆம் ஆண்டில் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார், ஆனால் இவரையும் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்