இந்திய அணி வீரர்களின் ரகசியம்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்துடன் உடனான தொடரில் 3 டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவிருக்கிறது.

ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த

சுற்றுப்பயணம் மொத்தம் 77 நாட்கள் ஆகும்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எந்த அளவிற்கு உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர் என்ற புகைப்படங்களை பிபிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் வியர்த்து விறுவிறுக்க உடற்பயிற்சி மேற்கொள்ளும் கோஹ்லி தனது கையில் உள்ள ஒரு எனர்ஜி ட்ரிங்ஸை காட்டுகிறார்.

மற்றொரு புறம் தினேஷ் கார்த்தி கடுமையாக பயிற்சி மேற்கொள்கிறார். இந்த பயிற்சியின் போது கிரிக்கெட் வீரர்கள் ஒருவரை ஒருவர் ஊக்குவித்துக்கொண்டும், கிண்டல் அடித்துக்கொண்டும் இருப்பார்களாம்.

இதனால் உடற்பயிற்சி என்பதை அவர்கள் சிரமமாக எண்ணாமல் அதையும் விரும்பி மேற்கொள்கின்றதாக கூறப்படுகிறது. இந்த கடினஉழைப்பே இந்திய வீரர்களுடைய வெற்றியின் ரகசியம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers