அவமானப்படுத்தி விட்டார்கள்! விராட், அனுஷ்காவுக்கு நோட்டீஸ்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு ம் நடிகர் அர்ஹான் சிங் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் விராட் கோஹ்லி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் சொகுசு காரில் பயணிக்கும் நபர் ஒருவர் குப்பையை சாலையோரம் வீசிய போது, அனுஷ்கா கண்டித்ததுடன் குப்பைத் தொட்டியில் போடுமாறு அறிவுறுத்தினார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, அனுஷ்கா கண்டித்த நபர் நடிகர் அர்ஹான் சிங் என்பது தெரியவந்தது.

அவர் கூறுகையில், எனது கவனக்குறைவால் நடந்தது, அனுஷ்கா கண்டித்த போது மன்னிப்பு கேட்டு விட்டேன், ஆனால் பொறுமையாக சொல்லியிருக்கலாம் என கூறினார்.

இந்நிலையில் வீடியோவை வெளியிட்டு பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கோஹ்லி மற்றும் அனுஷ்காவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers