மனைவியை பிரிய மனமில்லாமல் விமான நிலையத்தில் கோஹ்லி செய்த செயல்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, விமான நிலையத்தில் தனது மனைவிக்கு விடைகொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட, இந்திய கிரிக்கெட் அணி இன்று புறப்பட உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட உள்ளனர்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, டெல்லிக்கு புறப்படுவதற்காக மும்பை விமான நிலையத்திற்கு அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் வந்தார்.

அங்கு இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். இது நீண்ட தொடர் என்பதால் இருவரும் பிரிய மனமில்லாத மனநிலையில் இருந்தனர். அதன் பின்னர் சிரித்தபடி கட்டியணைத்துக் கொண்டனர்.

இதனை விமான நிலையத்தில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...