டோனியின் மனைவிக்கு மிரட்டலா? துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனியின் மனைவி துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான டோனி, தன்னுடைய தோழியான சாக்‌ஷியை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஜீவா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் டோனியின் மனைவியான சாக்‌ஷி துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டில் சில நாட்கள் நான் தனியாக இருப்பதாலும், தனியாக பல இடங்களுக்கு வெளியே சென்றுவருவதால், பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் காரணமாக சாக்‌ஷி இதை விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்