அரைமணி நேரத் தேர்வு மூலம் அணியில் இருந்து நீக்குவது என்ன நியாயம்?

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட் நடத்தப்பட்டது.

இதில் தேர்வாகாததால் இந்திய ஏ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டார். பின்னர் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. அடுத்து ஒரு நாள் போட்டியில் இருந்து அம்பத்தி ராயுடு! ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு, யோ- யோவால், அணியில் இடம்பெறாமல் போனது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சந்தீப் பட்டீல் கூறும்போது, டெஸ்ட் கிரிக்கெட் போல, வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

யோ- யோ உடல் தகுதி தேர்விலும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். ஒருமுறை அந்த தேர்வில் வெற்றி பெறவில்லை என்றால் அரை மணி நேரம் கழித்தோ, மறுநாளோ மற்றொரு வாய்ப்பு கொடுக்கலாம்.

அம்பத்தி ராயுடு யோ-யோவில் அன்று தேர்வு பெறாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். உள்ளூர்ப் போட்டிகளில் வருடம் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரர்களை, அரை மணி நேரத் தேர்வு மூலம் அணியில் இருந்து நீக்குவது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers