வீடியோவால் நொந்துபோன விராட் கோஹ்லி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

மனைவி அனுஷ்கா சர்மா குறித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த விராட் கோஹ்லியை சமூக வலைத்தளவாசிகள் கிண்டல் செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் , தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கடந்த சனிக்கிழமையன்று காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மற்றொரு காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் சாலையில் குப்பையை வீசியதால் அனுஷ்கா சர்மா அந்தக்காரில் சென்றுகொண்டிருந்தவரிடம் இதுபோன்று குப்பையை வீசுவது நாட்டை அசுத்தப்படுத்தும் செயல் என்றும், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை என்றும் அவருக்கு அறிவுறுத்தினார்.

இதனை வீடியோவாக எடுத்த விராட் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இது போன்று யாரேனும் தவறு செய்வதைக்கண்டால் உடனடியாக அதனை கண்டியுங்கள் என பதிவு செய்திருந்தார்.

பிரதமர் மோடி கொண்டுவந்த ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

இந்த வீடியோவை சமூக வலைத்தள வாசிகள் கடுமையாக கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். மனைவியின் வீரதீர சாகசங்களை எதற்காக விளம்பரப்படுத்துகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கேலி கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு பதிவை செய்துள்ளார் கோலி, அதில், இது போன்று கேள்வி கேட்க தைரியம் இல்லாத பலர் இதனை கேலிப்பொருளாக சித்தரிக்கின்றனர், தற்போது மக்களுக்கு எல்லாமே மீம் கண்டெண்டாக மாறிவிட்டது, அவமானம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்