காயம் அடைந்த பறவையை அரவணைக்கும் சச்சின்: வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
58Shares
58Shares
ibctamil.com

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது வீட்டின் பால்கனியில் காயமடைந்திருந்த பறவையை பாதுகாத்து, உணவளித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வீட்டு பால்கனியில், அடிபட்ட நிலையில் பருந்து ஒன்று வந்தது. உடலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக அதனால் பறக்க முடியவில்லை.

அதனைக் கண்ட சச்சின், அந்த பருந்துக்கு உணவளித்தார். மேலும், அதனை பத்திரமாக பார்த்துக் கொண்டார். அதன் பின்னர், பருந்து குறித்து விலங்குகள் மீட்புக்குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் பறவையை மீட்டு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, காயமடைந்த பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவன நிபுணர்களுடன் சச்சின் கலந்துரையாடினார்.

அதன் பின்னர், இது போன்ற விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயங்கள் எல்லாம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவை சச்சின் டெண்டுல்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதுவரை இந்த வீடியோவை 54 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.

மேலும், இந்த வீடியோவானது மற்ற சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்