இரவு விருந்தில் சீயர் பெண்களுடன் டெல்லி அணி வீரர்கள்: எச்சரிச்சை விடுத்த பிசிசிஐ

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இரவு விருந்தில் சீயர் பெண்களுடன் கலந்துகொண்ட டெல்லி அணிக்கு பிசிசி எச்சரிச்சை விடுத்துள்ளது.

தனது கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி, அதில் வெற்றி பெற்ற பின்னர், குருக்கிராமில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு டெல்லி அணி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

இதில் அந்த அணியின் வீரர்களுடன், அந்த அணி விளையாடிய போட்டிகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய சீயர் பெண்களும், விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சீயர் பெண்களை, வீரர்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லாத காரணத்தினால் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவினர் டெல்லி அணி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளியாட்கள் அணி வீரர்களுடன் கலப்பது விதிகளின்படி தவறு என்பதால் இது குறித்து அறிக்கை அளிக்கப்படும் என்றும் இது போன்று மீண்டும் ஒரு முறை நடக்கக்கூடாது என்று டெல்லி அணிக்கு பிசிசிஐ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers