நடுரோட்டில் வைத்து கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை அடித்த பொலிஸ்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி மீது தாக்குதல் நடத்திய பொலிசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜாவின் மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் முன்பு சென்று கொண்டிருந்த பொலிஸ் சஞ்சய் அகிர் பைக் மீது மோதியது.

இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து ஜடேஜா மனைவி காரை விட்டு இறங்கினார்.

அப்போது ஆத்திரமடைந்த பொலிஸ் சஞ்சய், ஜடேஜா மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். பொதுமக்கள் அவரை தடுக்கும் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஜடேஜாவின் மனைவி காயமடைந்தார்.

இதுகுறித்து விவரம் அறிந்த உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஜடேஜா மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers