விராட் கோஹ்லியின் மனைவிக்கு வந்த சோதனை: வைரல் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
437Shares
437Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

நடிகை அனுஷ்கா ஷர்மா, தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜீரோ’ படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

ஒரு மாதம் இந்த படப்பிடிப்பு நடக்கிறது. இந்நிலையில், அனுஷ்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கிழிந்த கால்சட்டையுடன் அவர் நடனமாடுகிறார். இதனைப் பார்த்தவர்கள் அனுஷ்காவின் கணவர் கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் தனது மனைவிக்கு நல்ல உடை வாங்கிக் கொடுக்கவில்லையே என்று கிண்டல் செய்துள்ளனர்.

முன்னதாக, அனுஷ்கா ஷர்மா தனது கணவர் பெயர் உள்ள T-Shirt-ஐ அணிந்து கொண்டு பெங்களூர் அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்