ப்ரீத்தி ஜிந்தா- சேவாக் இடையே மோதலா? காரணம் அஸ்வினே

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், சேவாக்கிடம் பஞ்சாப் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 8ஆம் திகதி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது 10வது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முன்னதாக, பஞ்சாப் அணி துடுப்பாட்டத்தில் இருந்தபோது கிறிஸ் கெய்ல் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர், யாரும் எதிர்பார்க்காத நிலையில் அணித்தலைவர் அஸ்வின் களம் இறங்கினார். அவர் 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், அஸ்வினை 3வது இடத்தில் களம் இறக்க ஆலோசகரான சேவாக் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா, போட்டி முடிந்ததும் சேவாக் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணம் ஆடும் லெவன் அணியில், சேவாக்கின் தலையீடு தான் என ப்ரீத்தி ஜிந்தா குற்றஞ்சாட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் அணியில் இருந்து சேவாக் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers