ஐபிஎல் வரலாற்றில் மக்கள் மனதில் இடம்பிடித்த செம ஹாட்டான தொகுப்பாளினிகள்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவில் மிகப்பெரிய வியாபாரமாக கருதப்படும் ஐபிஎல் போட்டியில், வீரர்கள் எந்தளவுக்கு கவனம் ஈர்க்கிறார்களோ, அந்த அளவுக்கு தொகுப்பாளினிகளும் முக்கிய இடம் பெறுவர்.

நேர்த்தியான பேச்சு, அவனைவரும் கவரும் திறன் இருந்தால் மட்டும் போதாது பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்க வேண்டும் ஐபிஎல் தொகுப்பாளினிகள். ஐபிஎல் தொடரை சிறப்பாக தொகுத்து வழங்கி, இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஹாட்டான தொகுப்பாளினிகள் இதோ,

அர்ச்சனா விஜயா

இந்தியாவில் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்த டிவி தொகுப்பாளினி இவர். அர்ச்சனா இந்திய கிரிக்கெட் அணிக்காக சில தொலைக்காட்சிகளுக்கு Tour Diary Bar Extra Cover மற்றும் Cricket Masala K என பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்

இவர் 2011 -2015 வரையில் ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஐபிஎல் வரலாற்றில் சிறப்பான தொகுப்பாளினி என்று பெயர் பெற்றவர் அர்ச்சனா.

மந்திரா பேடி

தூர்தர்ஷன் சேனலில் இவர் அறிமுகமானார். ஐசிசி நடத்திய 2003, 2007 உலகக்கோப்பை மற்றும் 2004 , 2006 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இவர் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

ஐபிஎல் 2009 தொடரையும் இவர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரொம்ப மாஸாக தொகுத்து வழங்கும் திறன் கொண்டவர்.

ரோசெல் மரியா ராவ்

ஐபிஎல்'ன் ஆறாவது ஆண்டு தொடரை இவர் தொகுத்து வழங்கி இருந்தார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2012 பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. எலக்ட்ரானிக் மீடியாவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள மரியா 2014ல் தனது 27 வயதில் கிங் ஃபிஷர் காலண்டரில் இடம் பெற்றார்.

அனைவரும் ஈர்க்கும் வகையில் பேசும் திறன், புத்திசாலித்தனம் போன்றவற்றால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

கரிஷ்மா கொடாக்

லண்டனில் பிறந்த இவர் ஐபிஎல்ன் ஆறாவது எடிஷனில் பங்குபெற்றார், 2006ம் ஆண்டுக்கான கிங் பிஷர் காலண்டரில் கரிஷ்மா தோன்றியுள்ளார்.

சோனாலி நாக்ராணி

பெமினா மிஸ் இந்தியா இண்டர்நேஷனல் பட்டதை வென்றவர். மற்றும் மிஸ் இண்டர்நேஷனலில் ரன்னர் அப்பாக வந்தவர். இவர் 2006ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிறகு 2007ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை தொகுத்து வழங்கினார்.

ஐபிஎல் தொடரை இவர் தொடர்ந்து நான்காண்டுகள் தொகுத்து வழங்கி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...