இப்படி கோஹ்லியை கிண்டல் செஞ்சிட்டாங்களே: வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

பெங்களூரு அணித் தலைவர் விராட் கோஹ்லியை கர்நாடக உணவகம் ஒன்று கிண்டலடித்துள்ளது.

2018-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு சீசனில் பெங்களூர் ராயல் சேலன்சர்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது.

கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய நிலையிலேயே பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

அதே நேரத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பெங்களூர் அணிக்கு ஐபிஎல் கிண்ணம் என்பது கனவாகவே உள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் துவங்கும் முன், விராட் கோலி ‘இ சாலா கப் நம்தே’என கன்னடத்தில் தெரிவித்தார். இதற்கு இந்தாண்டு கிண்ணம் நமக்கே என அர்த்தம்.

இந்நிலையில் கர்நாடகாவின் மாண்டியாவின் விவி ரோட்டில் உள்ள உணவகம் பெங்களூரு அணியை கேலி செய்துள்ளது. ஐபிஎல் துவங்கிய போது கோஹ்லியின்‘இ சாலா கப் நம்தே’ என பில் கொடுத்த அந்த உணவகம் தற்போது அதிருப்தியில் ‘நெக்ஸ்ட் சாலா கப் நம்தே’ என தற்போது பில்லை கொடுத்து வருகிறது.

இதற்கு அடுத்த ஆண்டு கிண்ணம் நமக்கே என அர்த்தமாகும்.

அதாவது இந்தாண்டு பெங்களூர் அணிக்கு கிண்ணம் கிடைக்காது என மறைமுகமாக கூறப்பட்டுள்ளது

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்