இளைஞர்களுடன் ரோட்டில் கிரிக்கெட் ஆடிய சச்சின் டெண்டுல்கர்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

மும்பையில் உள்ள சாலையில் சச்சின் டெண்டுல்கர் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2013-ல் ஓய்வு பெற்றுவிட்டார்.

ஆனாலும் கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சச்சினின் பல சாதனைகள் இன்றும் யாராலும் முறியடிக்க முடியாததாக உள்ளது.

இந்நிலையில் மும்பையின் விலி பார்லே பகுதியில் உள்ள பரபரப்பான தயால்டஸ் சாலையின் ஓரத்தில் சச்சின் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார்.

இது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்