அனைத்திற்கும் அவர்தான் காரணம்: ஐபிஎல் தொடர் தோல்விகளால் குமுறும் ரோகித் ஷர்மா

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
415Shares
415Shares
ibctamil.com

ஜேசன் ராய் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார் என மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவது வருத்தம் அளிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலும் நாங்கள் செய்த தவறுகளை அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயம் சரி செய்து கொண்டு மீண்டு வருவோம்.

இன்றைய போட்டியில் நாங்கள் நிர்ணயித்த 195 ரன்களே கடினமானது தான், பவுலிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டோம் இருந்தபோதிலும் ஜேசன் ராய் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார், இது அனைத்திற்கும் அவர் தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்