கடந்த 10 வருட ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை சந்தித்த எதிர்ப்புகள் மற்றும் பிரச்சனைகள்

Report Print Athavan in ஏனைய விளையாட்டுக்கள்
131Shares
131Shares
ibctamil.com

2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் போட்டி தற்போது 2018ம் ஆண்டுடன் 11-வது வருடத்திற்குள் வெற்றிகரமாக காலடி எடுத்து வைக்கிறது.

ஐ.பி.எல் போட்டிகளுக்கு எவ்வளவு அதிகமாக ரசிகர் உள்ளனரோ அதே அளவிற்கு பல பிரச்சனைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து உள்ளது.

கடந்த 10 வருட ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை சந்தித்த எதிர்ப்புகளை பற்றிய தொகுப்பு இதோ:

ஐ.பி.எல் 2009:

பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடக்கும் இப்போட்டியில் பங்கேற்க கூடாது என்று சிவ சேனா கட்சி தலைவர் உத்தவ் தக்கரே கோரிக்கை வைத்தார்.

காரணம் மும்பையில் நடந்த தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது . எனவே அந்த வருடம் மக்களவை தேர்தல் வேறு நடைபெற்றதால் 2009ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி ஒட்டுமொத்தமாக தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

ஐ.பி.எல் 2010:

ஐ.பி.எல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டதுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களும் பங்கேற்றிருக்கலாம் என்று கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் ஷாருக்கான் மீது அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் ஷாருக்கான் நடித்து வந்த 'மை நேம் இஸ் கான்' என்ற படத்துக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஐ.பி.எல் 2013:

இலங்கை பிரச்சனை தமிழகத்தி உச்சத்தில் இருந்த போது அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

இதனால் இலங்கை வீரர்கள் சென்னையில் நடந்த போட்டிகளில் விளையாடவில்லை. ஈழத்தமிழர்களின் பிரச்னை காரணமாக வீரர்களை பங்கேற்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் 2014:

இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு ஐ.பி.எல் போட்டிகள் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அதன்படி முதல்கட்ட போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில், இரண்டாம் கட்ட போட்டி இந்தியாவிலும் நடைபெற்றது.

ஐ.பி.எல் 2016:

மகாராஷ்டிராவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் 2016ம் ஆண்டு அங்கு போட்டிகளை இங்கு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.

அதில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக 22,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட உள்ளது.

இதனால் இங்கு நடக்கும் போட்டிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மும்பை, புனே, நாக்பூரில் நடக்க வேண்டிய போட்டிகளின் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

ஐ.பி.எல் 2018:

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் இந்த ஆண்டு சீசனுக்கான ஐ.பி.எல் போட்டியில் களமிறங்கியது.

ஆனால், போட்டியை சென்னையில் நடத்தக் கூடாது என்று சில அரசியல் அமைப்புகள், போராட்டக்காரர்கள், பிரபலங்கள் போராட்டத்தில் குதித்தனர்.

காவிரிக்கான போராட்டம் கடைசியில் ஐ.பி.எல் எதிர்ப்பு போராட்டமாக மாறியது. எல்லா தேசிய மற்றும் மாநில ஊடகங்களும் இந்த போராட்டத்தை ஐ.பி.எல் எதிர்ப்பு போராட்டமாகவே சித்தரித்தன. இதனால், காவிரி பிரச்னை காணாமல் போனது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்