புனேவிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற தடை: CSK அணிக்கு அடுத்த ஆப்பு

Report Print Athavan in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளை சென்னைக்கு பதிலாக புனே மைதானத்தில் நடந்த பிசிசிஐ முடிவு செய்திருந்த நிலையில் புனேவிலும் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

11வது ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட வேண்டிய 14 போட்டிகளில் 2 போட்டிகள் முடித்துள்ளது. இதில் ஒரு போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடக்கும் போராட்டங்களை, ஐபிஎல் போட்டிகள் திசை திருப்புகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு கிளம்பியது.

இருப்பினும் சென்னையில் நடைபெற்ற போட்டியின் போது நிறைய பாதுகாப்பு போடப்பட்டும் செருப்பு வீசுதல் போன்ற சம்பவங்கள் நடந்தது. இதனால் மீதம் இருக்கும் 6 போட்டிகள் சென்னையிலிருந்து புனேவிற்கு மாற்றப்பட்டது.

கேரளாவின் கொச்சிக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியாக புனேவிற்கு போட்டிகள் மாற்றப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கேவின் போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காரணம் புனேவில் ஏற்கெனவே கடுமையான தண்ணீர் பிரச்சனை நிலவி வருவதால் மைதானத்துக்கு தேவையான தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி நடைபெறும் சமயங்களில் மைதானத்தில் உள்ள புற்களை பராமரிக்க நிறைய தண்ணீர் செலவு செய்ய வேண்டி இருக்கும். இதனால் ஐபிஎல் போட்டிகளை புனேவில் நடந்த எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா அரசு ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.

இதனால் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்