இடம் மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிகள்: எத்தனை கோடி இழப்பு தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டதால் மொத்தம் ரூ.7.8 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் 7 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் ஒரு போட்டி மட்டுமே சென்னையில் நடத்தப்பட்ட நிலையில் போராட்டம் காரணமாக எஞ்சிய 6 ஆட்டங்களும் புனேக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் தமிழக அரசுக்கும், மாநில கிரிக்கெட் சங்கத்துக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி. வரி என பலவிதங்களில் வருமானம் வரும்.

அப்படி 6 ஆட்டங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதால் தமிழக அரசுக்கு ரூ.4.8 கோடி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.3 கோடி என்று மொத்தம் ரூ.7.8 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்