நாளை ஐபிஎல் ஆரம்பம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு களம் இறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவிருக்கிறது.

மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் திரும்புவதால், இந்த சீசன் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான துவக்க விழா மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடக்க உள்ளது. நாளை இரவு நடக்கும் இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் அதே மைதானத்தில் மோத உள்ளன.

இரண்டு அணிகளுமே மிகவும் வலுவான மற்றும் வெற்றிகரமான அணிகள். சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு முறையும், மும்பை இந்தியன்ஸ் மூன்று முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்