இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்புக்கு முன்னாள் வீரர் மனைவி நியமனம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பொறுப்பில், முன்னாள் இலங்கை வீரர் ஹஷன் திலகரத்னேவின் மனைவி அப்சரி திலகரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹஷன் திலகரத்னே ஆவார். இவரின் மனைவி அப்சரி திலகரத்னே, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அப்சரி திலகரத்னே ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து, அணியின் தலைமை பொறுப்பிற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு அப்சரி திலகரத்னே, இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர் திலங்கா சுமதிபாலாவை சந்தித்து, தனது பதவி உயர்வுக்கான நியமன ஆணையைப் பெற்றார் என தெரிவித்துள்ளார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு அப்சரியின் பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்