ரஹானேவை நம்புகிறேன்: ஷேன் வார்னே கூறிய கருத்து

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
275Shares

ஒரு அணித்தலைவருக்கான தகுதிகள் அஜிங்கியா ரஹானேவுக்கு இருப்பதாகவும், அவரை தாம் முழுவதுமாக நம்புவதாகவும் ஆலோசகர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

தடைக்கு பின்னர் திரும்பியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, அஜிங்கியா ரஹானே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரஹானே குறித்து ராஜஸ்தான் அணியின் ஆலோசகர் ஷேன் வார்னே கூறுகையில்,

‘நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சிறந்த வாய்ப்பினை நான் பெற்றிருப்பதற்கு நன்றியுடன் இருப்பேன்.

ஒரு சிறந்த அணி அமைந்துள்ளது. மற்றும் எங்களுக்கு சிறந்த அணித்தலைவரக அஜிங்கியா ரஹானே கிடைத்துள்ளார். அவரை நான் முழுவதுமாக நம்புகிறேன்.

நாங்கள் துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் சிறப்பாக ஆட்டத்தை முடிக்கக்கூடிய வீரர்கள் சிலரை கொண்டிருக்கிறோம். எங்களுடைய சிறந்த திறமையை நாங்கள் வெளிப்படுத்துவோம். ஏலத்தில் சிறப்பான வேலையை நாங்கள் முடித்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

Reuters

ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவர் ரஹானே கூறுகையில், வார்னேவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘வருகிற சீசனை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். எங்களிடம் சிறந்த பக்கம் உள்ளது. சஞ்சு சாம்சன் விக்கெட்டுகளை காப்பாற்றி ஆட்டத்தினை ரசிக்க வைக்கும்படி விளையாடுவார் என நான் நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்